நாகையில் பரபரப்பு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்


நாகையில் பரபரப்பு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
x
தினத்தந்தி 1 Nov 2020 8:58 AM IST (Updated: 1 Nov 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

நாகப்பட்டினம், 

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இதைத்தொடர்ந்து தகுந்த நேரத்தில் தனது(ரஜினி) மன்ற நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

போஸ்டர்கள்

இந்த நிலையில் நாகை புதிய, பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய வள்ளலே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் ஏற்பட வா, என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இதனால் நாகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story