மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிவயல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் + "||" + Removal of occupations in the outlying village by order of the Madurai High Court
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிவயல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிவயல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் வெளிவயல் கிராமத்தில் 8 ஏக்கர் அரசு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்த அரசு இடத்தை உடனே அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேற்று ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ், வருவாய் ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையில் பொக் லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
பாதுகாப்பு
ஆக்கிரமிப்பை அகற்றும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசிங்கம், அய்யப்பன், மணமேல்குடி, திருப்புனவாசல் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரதன், முத்து ஆகியோர் தலைமையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.