கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு


கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2020 5:08 AM GMT (Updated: 18 Nov 2020 5:08 AM GMT)

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பால் பண்ணையில் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள பால் பதப்படுத்தும் பிரிவு, வெண்ணெய் உற்பத்தி பிரிவு, நெய் உற்பத்தி பிரிவு, பால் பவுடர் பேக் செய்யும் பிரிவு, பால்கோவா தயாரிக்கும் பிரிவு, பால் பொருட்கள் இருப்பு குளிரூட்டும் பிரிவு மற்றும் பால் பாக்கெட் செய்யும் பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஆவின் தலைவர் குப்புசாமி, ஆவின் பொது மேலாளர் சாரதா, உதவி பொது மேலாளர் குமரன், துணை பொது மேலாளர் பிரசாத், உதவி பொது மேலாளர் (பால் பதம்) ராஜேஷ், ஆவின் தொழிற்சங்க மாநில துணை தலைவர் அருணாசலம், துணை பதிவாளர் கோபி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் கூட்டுறவு பண்ணையில் 245 சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 95 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதில் பால் கொள்முதல் 60 ஆயிரம் லிட்டர் குளிரூட்டப்பட்டு சென்னை இணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தினமும் 18 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 40 ஆயிரம் லிட்டர் பால் பெறப்பட்டு கிருஷ்ணகிரி பால் பண்ணையில் தினசரி 4 டன் பால் பவுடர், 3 டன் நெய், 3 டன் வெண்ணெய், பால்கோவா, குல்பி ஐஸ்கிரீம், பாதாம் பவுடர், தயிர், மோர் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பால் உற்பத்தியாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 வார பால் பணம் ரூ.12 கோடியே 50 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் சுமார் ரூ.75 லட்சத்திற்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டிசம்பர் மாதத்திற்கு பால் உப பொருட்களின் விற்பனை ரூ.1 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story