திருவாரூரில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்தது


திருவாரூரில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்தது
x

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து திருவாரூரில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர், 

திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து வருகிற 26-ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் குருநாதன் (தொ.மு.ச.), குணசேகரன் (ஏ.ஐ.டி.யூ.சி), அம்பிகாபதி (காங்கிரஸ்), சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அனிபா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் சந்திரசேகரஆசாத், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7.500 நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

100 வேலை திட்டத்தை 200 நாள் வேலையாக உயர்த்தி, குறைந்தபட்ச கூலியை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story