மாவட்ட செய்திகள்

திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார் + "||" + In the frustration of not being married Inside the suicide locked house The young man was hanged

திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்

திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்
பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். திருமணம் ஆகாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி, 

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம், சுபஸ்ரீ நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 30). தையல்காரரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 தினங்களாக இவரது வீடு பூட்டியே கிடந்தது. வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதற்கிடையில் நேற்று அவரது வீட்டில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பூட்டிய வீட்டுக்குள் வெங்கடேசன், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. எனவே அவர் 2 நாட்களுக்கு முன்பே தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது.

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் குடிப்பழக்கத்துக்கு ஆளான வெங்கடேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஏற்கனவே சில முறை தற்கொலைக்கு முயன்ற நிலையில் தற்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமாகாத விரக்தியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.