மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது + "||" + Sixty-two Congressmen have been arrested for marching with air plows demanding the repeal of agricultural laws

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் ஏர்கலப்பையுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர்கள் மகாதேவன், அமர்சிங், ராஜேந்திரன், அறிவழகன், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வக்கீல் ராஜ், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஷாஜகான், நகர தலைவர் பசுபதிராஜா உள்பட 62 பேர் ஏர் கலப்பையுடன் திருவையாறு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.


62 பேர் கைது

தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்ரவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் மற்றும் போலீசார் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்த 62 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் பேசினர். தொ.மு.ச. பேரவை செயலாளர் சேவியர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டம் நடந்தபோது மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் நிர்வாகிகள் பங்கேற்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
2. நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது
துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
3. மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி உரிமையாளர் காருடன் மாயமான கடை ஊழியர் கைது
கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.