7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்


7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
x
தினத்தந்தி 8 Dec 2020 6:08 AM GMT (Updated: 8 Dec 2020 6:08 AM GMT)

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.

ஈரோடு,

அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 313 மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், 92 மாணவ-மாணவிகள் பல் மருத்துவ படிப்புக்கும் தேர்வு பெற்று உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 23 மாணவ- மாணவிகள் தங்கள் மருத்துவப்படிப்பு படிக்க உள்ள கல்லூரிகளை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்து உள்ளனர். 13 பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், 7 பேர் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிக்க உள்ளனர். 3 பேர் பல் மருத்துவ படிப்பு தேர்ந்து எடுத்து உள்ளனர்.

கலெக்டரிடம் வாழ்த்து

ஈரோடு மாவட்டத்தில் இருந்து டாக்டர்களாக ஆகப்போகும் 23 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். அவரை மாணவ-மாணவிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் தங்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பினை அளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்கள்.

Next Story