தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: கார்-வேன், மோட்டார் சைக்கிள்கள் அடித்து உடைப்பு
தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்டதால் கார்-வேன், மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து விட்டு டிைரவரின் வீட்டை சூறையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் நகர் மேலத்தெருவில் வசித்து வருபவர் கார்த்தி(வயது34). வேன் டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் இருந்த போது அந்த பகுதியில் 4 பேர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் ஏன் இவ்வாறு தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கார்த்தி வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தியிருந்த கார் மற்றும் வேன், 5 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.பின்னர் கார்த்தியின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி அவரை அரிவாளால் வெட்ட முன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
4 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதாரண்யம் காந்திநகரை சேர்ந்த கமலக்கண்ணன் (20), ரத்தினவேல் (20), சிவசக்தி (28), மதன் (28) ஆகிய 4 பேரையும் கைதுசெய்தனர்.
Related Tags :
Next Story