மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே + "||" + No words of consolation for those who lost children in hospital fire: Chief-Minister Uttam Thackeray

ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை சந்தித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆறுதல் கூறினார்.
குடும்பத்தினருடன் சந்திப்பு
பண்டாரா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விமானம் மூலம் மும்பையில் இருந்து பண்டாரா சென்றார். அவர் ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் ஆஸ்பத்திரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் பேசினார்.

கடும் நடவடிக்கை

பின்னர் முதல்-மந்திரி கூறியதாவது:-
குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. தீ பிடித்தது விபத்தாக நடந்ததா அல்லது தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்காத காரணங்களால் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தின் போது மாநிலத்தில் வேறு எதுவும் ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதை கண்டறியவும் உத்தரவிட்டு உள்ளேன். உண்மை விரைவில் தெரியவரும். எதாவது விதிமீறில் நடந்து இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீரம் நிறுவனத்தில் தீ; நாசவேலை காரணமா? முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில்
கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியானர்கள். இது நாசவேலை காரணமா? என்பதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.
2. சீரம் நிறுவனத்தில் தீப்பிடித்து 5 பேர் பலி: நாசவேலை காரணமா? முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில்
கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியானர்கள். இது நாசவேலை காரணமா? என்பதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.
3. மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்; உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
4. பண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு
பண்டாரா ஆஸ்பத்திரி தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.
5. அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என அழைத்த உத்தவ் தாக்கரே - கூட்டணி அரசில் சலசலப்பு
காங்கிரசின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைத்தார். இதனால் கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.