மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது + "||" + Pongal products sales in Thoothukudi built kalai kattiyatu

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது
தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று களை கட்டியது.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு வந்தனர். அங்கு கரும்பு, மஞ்சள் குலை, வாழைத்தார் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு ஆத்தூர், வாழவல்லான், திசையன்விளை, ஸ்ரீவைகுண்டம், சேரன்மாதேவி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

தூத்துக்குடி மார்க்கெட்டில் நாட்டு பழ வாழைத்தார் ரூ.400-க்கும், கதலி ரூ.350-க்கும், பூலான்செண்டு ரூ.500-க்கும், கோழிக்கூடு ரூ.300-க்கும், சக்கை ரூ.250 முதல் ரூ.300 வரையும், செவ்வாழை ரூ.700-க்கும், ஏத்தன்பழம் ரூ.300 முதல் ரூ.350 வரையும், பச்சைபழம் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் விற்பனையானது.

கரும்பு
இதே போன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுப்பது வழக்கம். இதனால் பொங்கல் பானைகள் விற்பனையும் நடந்தது. தேனி, திருமங்கலம் பகுதியில் இருந்து கரும்பு விற்பனைக்காக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டு கரும்பு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று பனங்கிழங்கு விற்பனையும் நடந்து வருகிறது. சாயர்புரம், சிவத்தையாபுரம், திசையன்விளை, உடன்குடி உள்ளிட்ட பகுதிளில் இருந்து பனங்கிழங்கு தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. 600 கிழங்குகள் கொண்ட ஒரு மூட்டை பனங்கிழங்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பொங்கல் ெபாருட்கள் விற்பனை களை 
கட்டியுள்ளது.

காய்கறி
மேலும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால், காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காய்கறி விலையிலும் பெரிய மாற்றம் இல்லாமல் குறைவாகவே விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைவிவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

கத்தரிக்காய் - ரூ.50, தக்காளி - ரூ.15, மிளகாய் - ரூ.30, வெண்டைக்காய் - ரூ.25, அவரைக்காய் - ரூ.30, உருளைக்கிழங்கு - ரூ.20-30, முட்டைகோஸ் - ரூ.15, சேனைக்கிழங்கு - ரூ.15-20, சிறுகிழங்கு - ரூ.40, பீன்ஸ் - ரூ.50, பூசணிக்காய் - ரூ.8, முருங்கைக்காய் - ரூ.120,கேரட் - ரூ.15, பீட்ரூட் - ரூ.20, சவ்சவ் - ரூ.15, கருணைக்கிழங்கு - ரூ.40, சேம்பு - ரூ.50, சீனிக்கிழங்கு - ரூ.25, தடியங்காய் - ரூ.8, சிறியவெங்காயம் - ரூ.60, பல்லாரி - ரூ.40.

தொடர்புடைய செய்திகள்

1. வடியாத மழைநீரால் மக்கள் அவதி: தூத்துக்குடியில் தனித்தனி தீவுகளாக மாறிய தெருக்கள்
தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் அனைத்து தெருக்களும் தனித்தனி தீவுகளாக மாறியதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
2. கடந்த 6 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி; பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியல்
கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. தூத்துக்குடியில் மீனவர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது
தூத்துக்குடியில் நடந்த மீனவர் கொலையில் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. நெல்லை, தூத்துக்குடியில் விட்டு, விட்டு பெய்த மழை; வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அதிகாரிகள் குழு தொடர் கண்காணிப்பு
‘புரெவி‘ புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் விட்டு, விட்டு மழை பெய்தது. பொதுமக்கள் நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.