மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் விரைவில் வேளாண் பட்டய கல்லூரி தொடங்க நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் + "||" + Action Minister KP Anpalagan informed to start Agricultural Charter College in the district soon

மாவட்டத்தில் விரைவில் வேளாண் பட்டய கல்லூரி தொடங்க நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

மாவட்டத்தில் விரைவில் வேளாண் பட்டய கல்லூரி தொடங்க நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் வேளாண் பட்டயக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,

காரிமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 1297 மாணவ-மாணவிகளுக்கு ரூ.43.12 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா காரிமங்கலத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே..பி.அன்பழகன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காவேரி, ஒன்றிய குழுத்தலைவர் சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் செல்வராஜ், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், கூட்டுறவு சங்கத்தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிளஸ்-1 படிக்கும் 53,362 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டய படிப்புக்கான கல்லூரியை தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் தொடங்க தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்த கல்லூரி தொடங்கப்படும் நிலையில் இந்த மாவட்ட மாணவர்கள் அனைத்து வகையான உயர்கல்வி பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் அமைச்சர் பேச்சு
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
2. கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. வழங்கினர்.
3. 238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
4. காணை ஒன்றியத்தில் 1,355 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
காணை ஒன்றியத்தில் 1,355 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
5. திருக்கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.