மாவட்ட செய்திகள்

வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு + "||" + Collector Mekraj inspects development projects in Venkantur area

வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு
வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அம்மா பூங்கா வழியாக அண்ணா நகர் வரை 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட தார்சாலையையும், அலவாய்ப்பட்டியில் ரூ.12.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உணவு சேமிப்பு கிடங்கினையும் கலெக்டர் பார்வையிட்டார்.


மாட்டு கொட்டகை

பொன்பரப்பிபட்டியில் அத்தாயி என்ற பயனாளியின் நிலத்தில் ரூ.2.27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டுக்கொட்டகையையும், ராஜாமணி என்பவரது நிலத்தில் ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுக் கொட்டகையையும் கலெக்டர் பார்வையிட்டு, சரியான முறையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளனவா? தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்று அளந்து பார்த்து உறுதி செய்தார்.

மேலும் ரூ.1.19 லட்சம் மதிப்பீட்டில் பொன்பரப்பிபட்டியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் நன்கு வளர்ந்திருப்பதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாஸ்கர், வனிதா மற்றும் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் ஆய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணி நடைபெற்று வந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழைதிருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக மக்களிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டன.
2. தென்காசியில் இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் சமீரன் வெளியிட்டார்
தென்காசியில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சமீரன் நேற்று வெளியிட்டார்.
3. தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
4. சேலத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
சேலத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுரை
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி விபத்து இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை உருவாக்கிட வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.