திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா


திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 12 Jan 2021 1:56 AM GMT (Updated: 12 Jan 2021 1:56 AM GMT)

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று 10,008 வடைமாலை சாற்றப்படுகிறது.

திருச்சி,

ஸ்ரீராமபிரானின் தூதர் அனுமன் ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், உலகில் உள்ள அனைத்து மக்களின் தோஷ நிவர்த்திக்காகவும் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும் 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றுப்படி வைபவம் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமச்சந்திரன், அர்ச்சகர்கள் ரமேஷ், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Next Story