மார்த்தாண்டத்தில், பொங்கல் சிறப்பு தொகுப்பு கேட்டு ஆட்டோ டிரைவர்கள் நூதன போராட்டம்


மார்த்தாண்டத்தில், பொங்கல் சிறப்பு தொகுப்பு கேட்டு ஆட்டோ டிரைவர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2021 5:22 PM GMT (Updated: 13 Jan 2021 5:22 PM GMT)

மார்த்தாண்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு கேட்டு ஆட்டோ டிரைவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழித்துறை,

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல வாரியம் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது.

இந்தநிலையில் தொழில் ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நல வாரியத்தின் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வலியுறுத்தி குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் நேற்று மார்த்தாண்டத்தில் நூதன முறையில் பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி மார்த்தாண்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர்கள் பானையில் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள் சங்க பொதுச்செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான சங்க உறுப்பினர் ஜான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். துணை செயலாளர் ஜான் பேபி, மாவட்ட குழு உறுப்பினர் சிவகுமார், ஆட்டோ ஸ்டாண்டு மார்த்தாண்டம் கிளை செயலாளர் சுரேஷ், காட்டாத்துறை கிளை செயலாளர் கிறிஸ்டோபர், குழித்துறை ரெயில் நிலைய கிளை செயலாளர் ஜஸ்டின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story