சொக்கம்பட்டி அருகே, வெள்ளத்தில் சிக்கி தவித்த விவசாயிகள் மீட்பு


சொக்கம்பட்டி அருகே, வெள்ளத்தில் சிக்கி தவித்த விவசாயிகள் மீட்பு
x
தினத்தந்தி 13 Jan 2021 11:23 PM GMT (Updated: 13 Jan 2021 11:23 PM GMT)

சொக்கம்பட்டி அருகே, வெள்ளத்தில் சிக்கி தவித்த விவசாயிகளை தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் மீட்டனர்.

அச்சன்புதூர்,

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,800 கனஅடி தண்ணீர் பெரியாற்றில் திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் இடைகால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சொக்கம்பட்டி அருகே உள்ள பெரியநாயகம் கோவில் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையோரம் விவசாய பணிக்கு சென்ற கடையநல்லூரை சேர்ந்த விவசாயிகள் மாலையில் வீடு திரும்பி வர முடியாமல் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் ஆற்றில் தத்தளித்த 8 விவசாயிகளை கயிற்றின் மூலம் மீட்டனர்.

Next Story