மாவட்ட செய்திகள்

அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா + "||" + Pongal Festival at Government Offices

அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா

அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா
சிவகாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சிவகாசி,

அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நேற்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிவகாசி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் யூனியன் தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனுப்பன்குளம் பஞ்சாயத்து அலுவ லகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தலைவர் கவிதா தலைமையில் பொங்கல் தயார் செய்து வழங்கப்பட்டது. துணைத்தலைவர் வேணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் பாண்டியராஜ் கலந்து கொண்டார். பள்ளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தலைவர் உசிலை செல்வம், துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் மற்றும் கரும்புகளை தலைவர் உசிலை செல்வம் வழங்கினார்.

திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நகராட்சி பொறுப்பு என்ஜினீயர் பாண்டித்தாய் தலைமையில் அலுவலகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் கந்தசாமி செய்திருந்தார்.

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் கணேசன், துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன், ஆணையாளர் வசந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) வெள்ளைச்சாமி, மேலாளர் முத்துராமன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர் கலந்து கொண்டனர்.

பள்ளி

சிவகாசி அரசன் மாடல் பள்ளியின் சார்பில் பொங்கல் விழா மடத்துப்பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்றது. அப்பகுதி மக்களுடன் சேர்ந்து பள்ளி ஆசிரியைகள் பொங்கல் வைத்தனர். பின்னர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் தாளாளர் அசோகன், இயக்குனர் பிரியங்கா கணேஷ், முதல்வர் பாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியின் மகளிர் குழுவின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. உதவி பேராசிரியர் பியாமீரா வரவேற்றார். முதல்வர் அசோக் தலைமை தாங்கினார். கோலப்போட்டி உள்பட கலாசார போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கார்த்திகை செல்வி நன்றி கூறினார். அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு முதல்வர் தீபிகாஸ்ரீ தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் அசோகன், கல்லூரி இயக்குனர் நந்தநிலா, முன்னாள் முதல்வர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
2. திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் நடந்தது.
3. திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டத்தை கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
4. திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5. திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.