மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி + "||" + In Karnataka The first corona vaccination

கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி விக்டோரியா ஆஸ்பத்திரி பெண் துப்புரவு தொழிலாளி நாகரத்னாவுக்கு போடப்பட்டது. தடுப்பூசி தொடங்கும் நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நமது விஞ்ஞானிகள் 10 மாதங்களில் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.

கர்நாடகத்தில் 243 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) 24 ஆயிரத்து 300 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பிரபலமான டாக்டர்கள் தடுப்பூசியை போட்டு கொள்கிறார்கள். இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது, செயல் திறன் கொண்டது.

பொதுமக்கள் அரசு வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். வதந்திகளை நம்பக்கூடாது. ஒருவேளை பக்க விளைவுகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பீதி அடைய தேவை இல்லை. இணை நோய் உள்ளவர்களுக்கு அடுத்த கட்டத்தில் தடுப்பூசி போடப்படும். நமது நாட்டில் தான் தடுப்பூசியின் விலை மிக குறைவாக உள்ளது.

தடுப்பூசிபோட்டுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். ஆனால் பிரதமர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மட்டுமே முதல் கட்டத்தில் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும். இந்த தடுப்பூசி விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அக்கட்சி பாடம் கற்கவே இல்லை. இவ்வாறு சுதாகர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டமில்லை - முதல்வர் எடியூரப்பா
கர்நாடக மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
2. கர்நாடகத்தில் இன்று முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க முடிவு - துணை முதல்வர் லட்சுமண் சவதி தகவல்
கர்நாடக மாநிலத்தில் இன்னும் 2 நாட்களில் இயல்புநிலை திரும்பும் என அந்த மாநிலத்தின் துணை முதல்வர் லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.
3. “கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது - தலைமை செயலாளர் ரவிக்குமார் திட்டவட்டம்
கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் தலைமை செயலாளர் ரவிக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
5. கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவை தடுப்பது குறித்து நிபுணர் குழு ஆய்வறிக்கை தாக்கல்
மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவுகளை தடுப்பது குறித்த ஆய்வறிக்கையை கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம், நிபுணர் குழு வழங்கியது.