அடுத்த அறிவிப்பு வரும் வரை தானேயில் பள்ளிகள் திறப்பு இல்லை மாநகராட்சி அறிவிப்பு


அடுத்த அறிவிப்பு வரும் வரை தானேயில் பள்ளிகள் திறப்பு இல்லை மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2021 2:06 AM GMT (Updated: 17 Jan 2021 2:06 AM GMT)

தானேயில் அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் வரும் 27-ந் தேதி முதல் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் பள்ளி கல்வி துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து இருந்தார்.

அதே நேரத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு எடுத்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தானேயில் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மும்பையிலும் 2-வது கொரோனா அலை அபாயம் காரணமாக பள்ளிகள் திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க இந்த மாத தொடக்கத்தில் மாநில அரசு அனுமதி வழங்கியது. அவர்களுக்கு மும்பை, தானேயில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. எனினும் மாநிலத்தில் பல இடங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.

Next Story