கோவை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்


கோவை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jan 2021 4:03 PM GMT (Updated: 17 Jan 2021 4:03 PM GMT)

கோவை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கோவை,

கோவை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோவை மாநகராட்சி பிரதான அலுவல கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள் அமைத்தல், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற ஏராளமான வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை பணிகள், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்குகளை பராமரித்தல் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இப்பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றவரும் செல்வசிந்தாமணிகுளம், கிருஷ்ணம்பதிகுளம், செல்வம்பதி, குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்களில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், டி.பி. ரோடு மாதிரி சாலை, பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், உக்கடம் சூரியமின்சக்தி நிலையம், 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், வாகனங்கள் மூலமாக வீடுவீடாக குப்பைகள் சேகரிக்கும் பணிகள் போன்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சாலைப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, மாநகரப்பொறியாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story