காஞ்சீபுரத்தில் மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு: டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகையை வங்கிகள் மூலம் பெற ஏற்பாடு; முதல்-அமைச்சருக்கு, பணியாளர் சங்கம் கோரிக்கை


காஞ்சீபுரத்தில் மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு: டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகையை வங்கிகள் மூலம் பெற ஏற்பாடு; முதல்-அமைச்சருக்கு, பணியாளர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2021 8:30 PM GMT (Updated: 18 Jan 2021 8:15 PM GMT)

காஞ்சீபுரத்தில் மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு: டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகையை வங்கிகள் மூலம் பெற பணியாளர் சங்கம் கோரிக்கை மனு.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சுரேஷ்குமாரை சமூகவிரோதிகள் சிலர் தாக்கி கடையின் விற்பனை தொகை ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டனர். வெட்டு காயங்களுடன் சுரேஷ்குமார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலைமை மாநிலம் முழுவதும் உள்ளதால் டாஸ்மாக் பணியாளர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, சுரேஷ்குமாருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதுடன், ரூ.10 லட்சம் நிதியுதவி டாஸ்மாக் நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டும். திருடுபோன பணத்தை மீட்பதுடன், குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். திருடு போன பணத்தை பாதிக்கப்பட்ட பணியாளர் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. டாஸ்மாக் கடை பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மறுநிர்ணயம் செய்யவேண்டும். கடைகளின் விற்பனை தொகையை சென்னையில் இருப்பதுபோல வங்கி ஊழியர்கள் பெற்றுச்செல்லும் நடைமுறை ஏற்படுத்த வேண்டும். மாறாக இரும்பு பணப்பெட்டிகளை நிறுவும் ஏற்பாடுகளை செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story