வேலூர் பென்ட்லேண்ட் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டிய முன்கள பணியாளர்கள்


வேலூர் பென்ட்லேண்ட் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டிய முன்கள பணியாளர்கள்
x
தினத்தந்தி 19 Jan 2021 2:55 PM GMT (Updated: 19 Jan 2021 2:55 PM GMT)

வேலூர் பென்ட்லேண்ட் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிகமான முன்கள பணியாளர்கள் வந்தனர்.

வேலூர்,

நாடு முழுவதும் கடந்த 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தினமும் ஒரு மையத்துக்கு 100 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி, பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரி, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நேற்று காலை முதல் ஏராளமான முன் கள பணியாளர்கள் குவிந்தனர்.

அவர்களுக்கு டாக்டர்கள் செந்தாமரைக்கண்ணன், பிரகாஷ் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வதற்கு குறைந்த அளவே முன் களப்பணியாளர்கள் வந்திருந்தனர். கொரோனா தடுப்பூசி குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.. இதையடுத்து நேற்று ஏராளமான முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி செலுத்திய பின் அவர்களுக்கு ஒவ்வாமை ஏதும் ஏற்படுகிறதா? என 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பின்னர் அனுப்பபடுவதால் காலதாமதம் ஆகிறது. என்றும் அனைவருக்கும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story