நேதாஜி சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை
நேதாஜி சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு லாஸ்பேட்டை உழவர்சந்தையில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதே போல் பா.ஜ.க. சார்பில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story