மாவட்ட செய்திகள்

பெரம்பலூாில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை + "||" + Republic Day Parade Rehearsal in perampalur

பெரம்பலூாில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

பெரம்பலூாில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூாில் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
பெரம்பலூர்:

குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 8.05 மணிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 

பின்னர் அவர், சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார். இதையொட்டி பெரம்பலூர் ஆயுதப்படை போலீசார் நேற்று குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்ராமன் கண்காணித்தார். 

கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கினால் குடியரசு தின விழாவின் போது பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும், பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தியாகதுருகம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
தியாகதுருகம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
2. கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
3. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
4. துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
5. துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு