டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய லாரி ஏரிக்குள் கவிழ்ந்தது


டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய லாரி ஏரிக்குள் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 31 Jan 2021 1:30 AM GMT (Updated: 31 Jan 2021 1:30 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய லாரி ஏரிக்குள் கவிழ்ந்தது

உளுந்தூர்பேட்டை, 


சேலத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மகேந்திரன்(வயது 43) லாரியை ஓட்டினார். 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை புறவழிச் சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலை ஓரத்தில் உள்ள ஏரிக்குள் கவிழ்ந்தது. இதில் மகேந்திரன் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

லாரியின் டேங்கரில் இருந்து வெளியேறிய டீசல் ஏரி முழுவதும் பரவி இருப்பதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. 

விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் ஏரியில் கவிழ்ந்த லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் எலவனாசூர்கோட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story