மாவட்ட செய்திகள்

கரூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம் + "||" + Meat

கரூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

கரூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
கரூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:
இறைச்சி கழிவுகள் 
கரூர் வாங்கல் செல்லும் சாலையில் ஐந்துரோடு, பாழம்மாள்புரம், அரசுகாலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான இறைச்சிகடைகள், உள்ளன. இந்த இறைச்சிக்கடைகளில் தேங்கும் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் கோழியின் இறக்கைகள் உள்ளிட்டவற்றை வாங்கல்-செல்லும் சாலையோரம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சாக்குப்பையிலும், துணி பையில் மூட்டையாக கட்டியும் சாலையோரம் வீசி செல்கின்றனர். 
இதனால் அப்பகுதியில் தூர் நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் அவற்றை கிளறி விடுகின்றன. இதனால் பலமாக காற்ற வீசும் போது கோழியின் இறக்கைகள் காற்றில் பறந்து போக்கு வரத்துக்கு இடையுறு ஏற்படுத்துகிறது. மேலும், குவியலாக கொட்டி கிடக்கும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே சாலையோரங்களில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம்
சேலத்தில் நேற்று இறைச்சி, மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
2. இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன
இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன