மாவட்ட செய்திகள்

பெரம்பலூாில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Bank officials-employees protest

பெரம்பலூாில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூாில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூாில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின்  சார்பில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு அந்த வங்கி கிளையின் மேலாளர் சுந்தரசபாபதி தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

இதில் பெரம்பலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி அதிகாரி சத்தியராஜ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர்
வங்கியில் கண்ணாடியை வாலிபர் ஒருவர் அடித்து நொறுக்கிச்சென்றார்.