ராமநத்தம்:
ராமநத்தம் அடுத்த கொ.குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி அங்கம்மாள் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கம்மாளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அங்கம்மாள் திருடன்... திருடன்... என சத்தம் போட்டு அவரை பின் தொடர்ந்து ஓடினார். இருப்பினும் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.