திருவள்ளூர் மாவட்டம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு


திருவள்ளூர் மாவட்டம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 10:36 AM IST (Updated: 8 Feb 2021 10:36 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் நேற்று தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஊரக தொழில் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பென்ஜமின், திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, பி.வி.ரமணா சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வக்கீல்கள் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் கோ.சீத்தாராமன், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், கடம்பத்தூர் எஸ்.ரமேஷ், கடம்பத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.இ.சந்திரசேகர், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், போளிவாக்கம் மணி, தகவல் தொழில்நுட்ப கிளை செயலாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டனர்.

மீஞ்சூர்

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன் வெள்ளி வேல் வழங்கி சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தார். இதில் அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், முன்னாள் எம்.பி. டாக்டர் வேணுகோபால், விஜயகுமார் எம்.எல்.ஏ. , திருவள்ளூர் வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கமலக்கண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மோகனவடிவேல், மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன், அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க இயக்குனர் பொன்னுதுரை, நாலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story