விராலிமலை சுங்கச்சாவடியில் அ.ம.மு.க. தொண்டர்களின் வாகனங்களை போலீசார் மறித்ததால் பரபரப்பு
விராலிமலை சுங்கச்சாவடியில் அ.ம.மு.க. தொண்டர்களின் வாகனங்களை போலீசார் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை,
மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவிலிருந்து சென்னைக்கு நேற்று வருவதாக கூறியதன் பேரில் அ.ம.மு.க. தொண்டர்கள் அவரை வரவேற்க வாகனங்களில் சென்னைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி வழியாக சென்னைக்கு சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அ.ம.மு.க. தொண்டர்கள் வந்த ஒரு சில வாகனங்களை நிறுத்தி திரும்பிச் செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அ.ம.மு.க. தொண்டர்கள் சிலர் சாலை மறியல் செய்யப்போவதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைதொடர்ந்து போலீசார் அந்த வாகனங்களை செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story