மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 9:30 AM GMT (Updated: 9 Feb 2021 9:30 AM GMT)

வேலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணாசாலை ஏலகிரி அரங்கம் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கரி முன்னிலை வகித்தார். பொருளாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.

போராட்டத்தில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் வழங்குவது போல் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமும், வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய 2016 சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story