தென்னலூரில் புதிய பாலம்


தென்னலூரில் புதிய பாலம்
x
தினத்தந்தி 14 Feb 2021 12:43 AM IST (Updated: 14 Feb 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

தென்னலூரில் புதிய பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

அன்னவாசல், பிப்.14-
அன்னவாசல் அருகே திருநல்லூர் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். .இந்த புதிய உயர்மட்ட பாலம் 240 மீட்டர் நீளமும், 9.95 மீட்டர் அகலமும் உடையதாகும். இந்த புதிய பாலத்தினால் விராலிமலையிலிருந்து இலுப்பூர் செல்வதற்கு ஏற்கனவே உள்ள மாநில நெடுஞ்சாலை 71-க்கு இணையாக புதியசாலை இணைப்பு கிடைத்துள்ளது. மேலும் புகழ் பெற்ற திருநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் இப்பாலம் அமைந்துள்ளது. இந்த புதிய பாலத்தினால் திருநல்லூர், முல்லையூர், குளவாய்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விராலிமலை செல்வதற்கு 10 கி.மீ தூரம் குறையும். இந்த சாலை திறக்கப்பட்டதை தொடர்ந்து இப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story