மாவட்ட செய்திகள்

சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன்காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாட்டம் + "||" + Romance Couple Couple Celebration

சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன்காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாட்டம்

சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன்காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாட்டம்
காதலர் தினத்தையொட்டி சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாடினார்கள்.
அன்னவாசல்:
காதலர் தினம் 
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலில் காதலர் தினத்தன்று காதலர்களில் சிலர், சித்தன்னவாசலில் முகாமிட்டு ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதும், மலையின் உச்சியில் ஆர்வ மிகுதியால் பல்வேறு கோணங்களில் செல்பி எடுப்பதும் சிலர் அநாகரிக செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அதேபோன்று சிலர் சித்தன்னவாசல் பூங்காக்கள் செடி, கொடிகள் நிரம்பிய பகுதிகளில் அமர்ந்து அநாகரிக செயல் பாடுகளில் ஈடுபடுவதால் அவ்வழியாக செல்லும் மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கின்றது. 
எனவே அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். 
தீவிர பரிசோதனை 
இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தியில் வெளியிடப்பட்டது. இதனால் சித்தன்னவாசலில் அன்னவாசல் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சித்தன்னவாசல் நுழைவு பகுதி, பூங்காக்கள் சமணர் படுக்கை, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சித்தன்னவாசல் நுழைவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
கேக் வெட்டி கொண்டாட்டம் 
சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்த காதல் ஜோடிகள் சிலர் பஸ்சை விட்டு இறங்கியதும் போலீசாரை கண்டதும் ஓட்டமெடுத்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் சித்தன்னவாசல் உள்ளே செல்லாமல் வெளியிலேயே பொழுதை கழித்தனர். 
விடுமுறைநாள் என்பதால் சித்தன்னவாசலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள பூங்காக்கள், படகுகுளம் சமணர்படுக்கை, அஜந்தா ஓவியங்கள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் சித்தன்னவாசல் வந்த புதிய திருமண தம்பதிகள், காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக் வெட்டி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். மேலும் உணவுகளை கொண்டு வந்து அங்கி அமர்ந்து சாப்பிட்டு பொழுதை களித்தனர். இதனால் சித்தன்னவாசல் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

1. மே தினம் கொண்டாட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.
2. துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை
3. மகளிர் தினம் கொண்டாட்டம்
மகளிர் தினம் கொண்டாட்டம்
4. கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
5. கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.