குமரன் நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா


குமரன் நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 14 Feb 2021 6:19 PM GMT (Updated: 14 Feb 2021 6:19 PM GMT)

குமரன் நகரில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 18 பட்டி கிராமங்களுக்கும் சொந்தமானது. இக்கோவில் திருவிழாவையொட்டி பொங்கல் வைத்து மாரியம்மன் சிலை கோவிலில் இருந்து ஊர்வலமாக வேலாயுதம்பாளையம் குமரன் நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு வைக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வடிசோறு படைத்து பக்தர்கள் வழிபட்டனர். 2-ம்-நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் காவேரி ஆற்றுக்கு சென்று நீராடி விட்டு புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பூைஜகள் நடந்தது. 3-ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்தும், மா விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். 4-ம் நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் அமர வைத்து வீதி உலா நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் சிலை நாணப்பரப்புக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story