140 மாணவ-மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி


140 மாணவ-மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி
x
தினத்தந்தி 14 Feb 2021 7:08 PM GMT (Updated: 14 Feb 2021 7:08 PM GMT)

இளையான்குடியில் 140 மாணவ-மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி என்.சி.சி. அமைப்பும், காரைக்குடி தமிழ்நாடு 9-வது பட்டாலியனும் இணைந்து நடத்தியது. 5 நாட்கள் நடைபெற்ற ராணுவ பயிற்சி முகாமை கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தொடங்கி வைத்தார்.
இதில் இளையான்குடி டாக்டர் சாகிர்உசேன் கல்லூரி, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, மற்றும் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 140 மாணவ-மாணவிகள் ராணுவ பயிற்சியை பெற்றனர். ராணுவ பயிற்சியை கர்னல் ரஜினி பிரதாப், கமாண்டிங் ஆபீசர் லெப்டிெனன்ட் கர்னல் அஜய்சிங் பர்கோடி ஆகியோர் பயிற்சி அளித்தனர். கல்லூரிகளின் என்.சி.சி.அதிகாரிகள் இளையான்குடி- அபுபக்கர் சித்திக், ராமநாதபுரம்- உத்திர செல்வம், சிவகங்கை- சவுந்தரராஜன், கீழக்கரை- மருதாசலமூர்த்தி ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தார்கள்.


Next Story