பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் படுகாயம்


பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Feb 2021 6:17 PM GMT (Updated: 15 Feb 2021 6:17 PM GMT)

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் விழுந்து படுகாயம் அடைந்தார்.

கீரமங்கலம், பிப்.16-
பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் விழுந்து படுகாயம் அடைந்தார்.
பாலத்தில் விழுந்த இளைஞர்
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக குளமங்கலம் செல்லும் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு் முதல் கட்டமாக தெற்கு பகுதியில் பாலம் கட்டும் பணி நடக்கிறது.
பாலம் கட்டப்படும் போது சாலையை தடுத்து மாற்றுப் பாதையில் செல்ல பதாகை வைக்க வேண்டும். ஆனால் இங்கு மாற்றுப்பாதை அமைக்காமலும், எச்சரிக்கை பதாகை வைக்காமலும் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
படுகாயம்
 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொத்தமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது  30) என்பவர் அந்த வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பாலம் பணி நடப்பது தெரியாமல், அங்குள்ள பள்ளத்தில் விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக  புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  பாலம் கட்டும் இடத்தில் எச்சரிக்கை பதாகையும், மாற்றுப் பாதையும் அமைக்காததால்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story