நாமக்கல்லில் 20 கிலோமீட்டர் நடந்து இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவி சாதனை


நாமக்கல்லில் 20 கிலோமீட்டர் நடந்து இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவி சாதனை
x
தினத்தந்தி 15 Feb 2021 7:07 PM GMT (Updated: 15 Feb 2021 7:07 PM GMT)

நாமக்கல்லில் 20 கிலோமீட்டர் நடந்து இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவி சாதனை படைத்தார்.

நாமக்கல்:
நாமக்கல்லில் 20 கிலோமீட்டர் நடந்து இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவி சாதனை படைத்தார்.
சிலம்ப மாணவிகள்
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏகலைவா கலைக்கூடத்தில் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவிகள் பிரார்த்தனா (வயது 8), அக்‌ஷயா ஸ்ரீ (9) ஆகியோர் சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவி பிரார்த்தனா ஒரு நிமிடத்தில் 43 முறை நான்கடி சுவடு எடுத்து வைத்து சாதனை படைத்தார்.
இதேபோல மற்றொரு மாணவியான அக்‌ஷயா ஸ்ரீ 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடைவிடாது சிலம்பம் சுற்றியவாறு சென்று சாதனை புரிந்தார். இந்த சாதனையை அவர் சுமார் 5 மணி நேரத்தில் செய்து முடித்தார். 
சான்றிதழ்
சாதனை புரிந்த இரு மாணவிகளையும் பாராட்டி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் ஜெயப்பிரதாப், கவுதம் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
முன்னதாக இந்த சாதனை நிகழ்வை நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தநாராயணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல், இணை செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Story