ஊமாரெட்டியூரில் செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


ஊமாரெட்டியூரில் செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Feb 2021 10:14 PM GMT (Updated: 15 Feb 2021 10:14 PM GMT)

ஊமாரெட்டியூரில் நடந்த செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

அம்மாபேட்டை
ஊமாரெட்டியூரில் நடந்த செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றார்கள். 
செல்லியாண்டியம்மன்
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரில் பழமையான செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிதாக கோபுரங்கள், முன் மண்டபம், மகா மண்டபம், பரிவார தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கும்பாபிஷேகவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தார்கள். அதன்பின்னர் புனிதநீர் யாகசாலையில் வைக்கப்பட்டு, பல்வேறு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. 
கும்பாபிஷேகம்
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை கோபுர கலசங்களுக்கும், சாமி சிலைகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இந்தவிழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, ஊமாரெட்டியூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. அம்மாபேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். 

Next Story