திருச்சி விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் பாதை மாற்றியமைப்பு


திருச்சி விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் பாதை மாற்றியமைப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 9:35 PM GMT (Updated: 2021-02-17T03:05:32+05:30)

திருச்சி விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் பாதை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் வளர்ச்சி பணிகள் பல்வேறு விதமாக மிகவும் விரைவாகவும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வாகனங்கள் வெளியேறும் பகுதி மிகவும் குறுகிய பாதையாக இருப்பதால் அதனை அகலப்படுத்தி வாகனங்கள் மிகவும் விரைவாக வெளியேறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. 

அதன் அடுத்த கட்டமாக விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வரும் வாகனங்கள் வெளியேறுவதற்கு இருந்த பழைய பாதை, புதிய முனையம் கட்டுமான பணிக்காக அடைக்கப்படுவதால் புதிய மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வெளியேறும் பாதை அது அடுத்த 10 நாட்களில் புதிய பாதைகளின் வழியாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story