மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் + "||" + Congress parties Celebration by offering sweets

காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கவர்னர் கிரண்பெடி திடீரென்று மாற்றப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடி திடீரென்று மாற்றப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கிரண்பெடி நீக்கம்
புதுச்சேரி கவர்னராக கடந்த 4½ ஆண்டுகளாக கிரண்பெடி பதவி வகித்தார். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை தடுப்பதாகவும் ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவரை மாற்றக்கோரி காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு கவர்னர் கிரண்பெடி திடீரென    நீக்கப்பட்டார். இது பற்றிய தகவல் அறிந்த உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கூடினர். அங்கு அவர்கள்    கிரண்பெடிக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தொடர்ந்து அங்கு அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதேபோல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பு, மறைமலை அடிகள் சாலை, பஸ் நிலையம், அண்ணா சிலை சந்திப்பு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாணவர் கூட்டமைப்பு
மாணவர் கூட்டமைப்பினர், அதன் நிறுவனர் சாமி நாதன் தலைமையில் நிர்வாகிகள் கவர்னர் மாளிகை முன் கிரண்பெடி நீக்கப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் கிரண்பெடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.