கஞ்சா கடத்தல் மற்றும் வாடகைக்கார் மோசடி வழக்கில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


கஞ்சா கடத்தல் மற்றும் வாடகைக்கார் மோசடி வழக்கில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 Feb 2021 6:27 AM GMT (Updated: 17 Feb 2021 6:27 AM GMT)

கஞ்சா கடத்தல் மற்றும் வாடகைக்கார் மோசடி வழக்கில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் கஞ்சா கடத்தியதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 156 கிலோ எடை கொண்ட கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும், கஞ்சா கடத்தல் தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் 10 பேர்

கஞ்சா கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 23 பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒச்சப்பதேவர் (48), செல்வராஜ் (39), கம்பத்தை சேர்ந்த பாண்டியன் (55), கேரளாவை சேர்ந்த ஆருமோன் (36), திருச்சியை சேர்ந்த முகமது அசாருதீன் (41), திருச்சியை சேர்ந்த ரவி (31), மணிகண்டன் (49), கரிமுதீன் (36) ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பொன்னையா குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 45 கார்களை வாடகைக்கு எடுத்து ஏமாற்றியதாக கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தை சேர்ந்த காண்டீபன் (47), மணலி புதுநகரை சேர்ந்த கிருபாகரன் (47) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story