36 உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு


36 உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 Feb 2021 5:20 PM GMT (Updated: 17 Feb 2021 5:20 PM GMT)

36 உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு ரூ.22 ஆயிரம் அபராதம்

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி வடக்கு, வெள்ளகோவில், பல்லடம், அருள்புரம், பல்லடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடைந்த முட்டைகள் 1,500 ஆம்லேட் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், உடைந்த முட்டைகளை பயன்பாட்டிற்கு வைக்கக்கூடாது எனவும், பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனவும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 36 உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் தரமற்ற உணவு தயாரித்தது என கடை உரிமையாளர்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story