சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கிய வார்டு உறுப்பினர்


சாகும்வரை உண்ணாவிரதத்தை  தொடங்கிய வார்டு உறுப்பினர்
x
தினத்தந்தி 17 Feb 2021 6:48 PM GMT (Updated: 2021-02-18T00:18:21+05:30)

வார்டு உறுப்பினர் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

வடகாடு, பிப்.18-
ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் பள்ளத்திவிடுதி ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் பள்ளத்திவிடுதி ஊராட்சியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி  நேற்று காலையில் பள்ளத்திவிடுதி ஊராட்சி மன்றம் முன்பு அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இது குறித்து தகவல் அறிந்த  திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி  மாலையில் முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் வருகிற 28-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எழுதி கொடுத்தார். இதனையடுத்து முருகேசன் உண்ணாவிரத்தை கைவிட்டு சென்றார்.Next Story