நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மகாராஜா (வயது 28). இவர் மீது பாளையங்கோட்டை பகுதியில் கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
எனவே பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் பரிந்துரையின்பேரில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மகாராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார், மகாராஜா மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை, போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story