நிர்வாக திறனில் தமிழகம் சிறந்து விளங்குகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


நிர்வாக திறனில் தமிழகம் சிறந்து விளங்குகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2021 9:49 PM GMT (Updated: 19 Feb 2021 9:49 PM GMT)

நிர்வாக திறனில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நிர்வாக திறனில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 
தினசரி மார்க்கெட்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.85 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட உள்ளது. மாநகர் பகுதியில் ரூ.100 கோடி செலவில் புதைவட மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 4 ஆயிரத்து 680 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.935 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.350 கோடி செலவில் பல்வேறு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது ரூ.140 கோடி செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
தள்ளுபடி
தேர்தல் வரும்போது தான் என்றைக்குமே வாக்குறுதிகளை தருவது வழக்கம். தேர்தல் முடிந்து அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களுடைய கடமையாக இருந்து வருகிறது. ஆனால் தமிழக முதல் -அமைச்சர் தேர்தலுக்கு முன்பாகவே விவசாயிகளின் கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடியை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு மிக விரைவில் மும்முணை மின்சாரம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார். நிர்வாக திறனில் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story