தியாகதுருகத்தில் அரசு ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது
தியாகதுருகத்தில் அரசு ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் செல்லும் சாலையில் மேல்பூண்டி ஏரி கோடி அருகே புதியதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. நேற்று சாலைப் பணியாளர்கள் சீனுவாசன், சக்திவேல் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன்(வயது 47), அசோக்குமார் (45) ஆகியோர் எங்களுக்கு தெரியாமல் எப்படி பாலம் வேலை நடைபெறுகிறது என கூறி அவர்களை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அசோக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story