7 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாளை மறுநாள் திறப்பு


7 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாளை மறுநாள் திறப்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 7:05 PM GMT (Updated: 21 Feb 2021 7:05 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 7 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2020-21-ம் ஆண்டில் சம்பா சாகுபடி பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், 3-ம் கட்டமாக அரியலூர் தாலுகாவில் அழகியமணவாளன், குலமாணிக்கம், மஞ்சமேடு, கீழக்கொளத்தூர், உடையார்பாளையம் தாலுகாவில் விக்கிரமங்கலம், பிள்ளைப்பாளையம், தா.பழூர் ஆகிய 7 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாளை மறுநாள் (புதன்கிழமை) திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அருகில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story