தென் மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் பூங்கா அமைக்க வேண்டும் குலாலர் முன்னேற்ற சங்க மாநாட்டில் வலியுறுத்தல்


தென் மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் பூங்கா அமைக்க வேண்டும்  குலாலர் முன்னேற்ற சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Feb 2021 7:13 PM GMT (Updated: 21 Feb 2021 7:13 PM GMT)

தென் மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லை:
தென் மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மாநாடு

அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம், அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கத்தின் 3-வது தென் மண்டல மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில்  நடந்தது.

தொழிற்சங்க பொதுச்செயலாளர் தியாகராஜன் நீலகண்டர் தலைமை தாங்கினார். தொழிற்சங்க தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். தொழிற்சங்க துணைச் செயலாளர் முருகன், கொள்கை பரப்பு செயலாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்பாண்ட பொருட்களுக்கான கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.
மாநாட்டில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், டாக்டர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழில் பூங்கா

மாநாட்டில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணம் விடுபட்ட அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குலாலர் சமுதாயத்தை சேர்ந்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கல்வியிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களுக்கு மகளிர் திட்டம் மூலம் நவீன மண்பாண்டங்கள் தயாரிக்க அரசு சார்பில் பயிற்சி அளிக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவு மண்பாண்ட பொருட்கள் ஏற்றுமதி ஆவதால் தொழிலை விரிவுபடுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க தென்மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் பூங்கா அமைத்து தரவேண்டும். செங்கல் தொழில் செய்யும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு லைசென்ஸ், தொழில் வரி எளிய முறையில் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story