மாவட்ட செய்திகள்

காங்கேயம் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு + "||" + hotal raiduin kangyam

காங்கேயம் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு

காங்கேயம்  உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு
காங்கேயம் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு
காங்கேயம்:
காங்கேயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் துரித உணவகங்கள், மீன் கடைகள், கோழிக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்  ஆய்வு மேற்கொண்டனர். இதில் உரிமம் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதித்ததுடன், தடை செய்யப்பட்ட பாலிதீன்கள், உணவு பரிமாற வைத்திருந்த காகிதங்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கும் அபராதம் விதித்தார். மேலும் மீன், சிக்கன் கடைகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மற்றும் மாமிசங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.
25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோல் சுகாதாரமற்ற முறையில் உணவில் கலப்படம் மேற்கொண்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.