மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் பெண் தற்கொலை + "||" + Female suicide in family dispute

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

குடும்ப தகராறில் பெண் தற்கொலை
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
சிவகாசி,பிப்.
திருத்தங்கல்லை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும், கார்த்திகைபட்டியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி தனது கணவர் வசித்து வரும் சமத்துவபுரம் பகுதிக்கு வந்த ராமலட்சுமி திடீரென்று தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்ட ராமலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமலட்சுமியின் தாய் வெள்ளைத்தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.