தீயில் கருகி 17 ஆடுகள் பலி


தீயில் கருகி 17 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 22 Feb 2021 10:19 PM IST (Updated: 22 Feb 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

தீயில் கருகி 17 ஆடுகள் பலியாகின

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்துள்ளார். இரவு நேரத்தில் ஆடுகளை வயல் பகுதியில் உள்ள இடத்தில் அடைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு கொண்டுசென்று விட்டு ஆடுகளை வயல் பகுதியில் அடைத்துள்ளார். இந்தநிலையில் அவரது வயலின் அருகே பாண்டி கண்மாய் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவர் வயலில் உள்ள கழிவுகளை தீ வைத்து கொளுத்தி உள்ளார். அப்போது மளமளவென எரிந்துவந்த தீ எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கருணாநிதியின் ஆட்டு மந்தைக்கு பரவி பற்றி எரிந்தது. அப்போது அதற்குள் இருந்த 17 ஆடுகள் சம்பவ இடத்திலேயே கருகி இறந்து விட்டன. இதுகுறித்துகருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீசார் ஆனந்தவள்ளிமீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story